VXNHJyNv6YtK75UpFJ4D 1
இலங்கைசெய்திகள்

இலங்கை மத்தியவங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

Share

நாட்டில் எந்த வகையான உள்நாட்டு கடன் மேம்படுத்துதலிலும் வங்கி முறைமையின் ஸ்திரத்தன்மை மற்றும் பொது வைப்புகளின் பாதுகாப்பை மத்திய வங்கி உறுதி செய்து பாதுகாக்குமென இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை தொடர்பான மாநாட்டிலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மக்களின் வங்கி வைப்புத்தொகை மற்றும் வங்கி முறையின் ஸ்திரத்தன்மை தொடர்பாக பல ஊகங்கள் மற்றும் அனுமானங்கள் பரப்பப்படுவதைக் காணமுடிகிறது.

இலங்கை மத்திய வங்கியின் தரப்பில் எங்களின் முதன்மை நோக்கம் நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதாகும்.

எந்த வகையான கடன் மேம்படுத்துதலின்போதும் வங்கி அமைப்பு மற்றும் பொது வைப்புத்தொகையின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” என  மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...