IMG 20230510 WA0002
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச சந்தைகளில் யாழ். வாழைப்பழம் – அதிகாரிகளுக்கு டக்ளஸ் பாராட்டு!

Share
கிடைக்கின்ற வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தி உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்லுகின்ற போது, எமது மக்களின் பொருளாதாரத்தினை  உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஆழமான தீர்க்கதரிசனமான முயற்சிகளை முன்னெடுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், புத்தூரில் அமைக்கப்பட்டுள்ள, வழைப்பழ ஏற்றுமதி தொழிற்சாலையை அண்மையில் பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதியுதவியில் விவசாய செயற்பாடுகளை நவீனமயப்படுத்தும் திட்டத்திற்கு அமைய அமைய அமைக்கப்பட்டுள்ள குறித்த தொழிற்சாலையில் பதனிடப்படுகின்ற கதலி வாழைப்பழங்கள் டுபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முதற்கட்டமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சுமார் 250 விவசாயிகள் நேரடியாக பயனடைந்துள்ளதுடன் கதலி வாழைப்பழத்திற்கு நியாயமான விலையையும் யாழ்ப்பாண விவசாயிகள் பெறத் தொடங்கியுள்ளனர்.
எதிர்வரும் மாதங்களில் இத்திட்டத்தின் மூலம் ஏற்றுமதியினை விஸ்தரித்து நேரடியாக பயனடையும் விவசாயிகளின் எண்ணிக்கையை  700 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதா அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், எதிர்வரும் மாதங்களில் வாரத்திற்கு 22,000 கிலோ கதலி வாழைப்பழம் யாழ்ப்பாணத்தில் இருந்து ஏற்றுமதி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
IMG 20230510 WA0004 IMG 20230510 WA0001
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...