download 7 1 5
சினிமாபொழுதுபோக்கு

பிக்மென்டேஷனில் இருந்து முகத்தை பாதுகாப்பது எப்படி!

Share

பிக்மென்டேஷனில் இருந்து முகத்தை பாதுகாப்பது எப்படி!

பெண்களின் அழகை பாதிக்கும் சரும பிரச்சினைகளில் ஒன்று பிக்மென்டேஷன். இதை ‘கருந்திட்டு’ அல்லது ‘மங்கு’ என்றும் கூறுவார்கள். இது கன்னம், நெற்றி, மூக்கின் மேல் பகுதி, கழுத்தின் பின் பகுதியில் காணப்படும் ஒரு வகையான கருப்பு நிற படையாகும்.

தோலின் நிறத்தைப் பொறுத்து இதன் அடர்த்தி வேறுபடும். பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது அதற்கான தீர்வு என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம். பிக்மென்டேஷன் ஏற்பட காரணம் என்ன முன்பெல்லாம் 40 வயதைக் கடந்தவர்களுக்கு தான் சருமத்தில் கருந்திட்டு பிரச்சினை ஏற்படும். ஆனால் இப்போது 20 வயதிலேயே பலர் பாதிக்கப்படுகிறார்கள்.

கழிவுகள் மற்றும் நச்சுப்பொருட்கள் உடலில் இருந்து சரியாக வெளியேறாமல் இருப்பது, ஊட்டச்சத்து பற்றாக்குறை, சருமத்தில் படியும் இறந்த செல்களை அவ்வப்போது நீக்காமல் இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல காரணங்களால் பிக்மென்டேஷன் பிரச்சினை ஏற்படுகிறது.

ஹார்மோன் சமநிலையில் மாற்றம் ஏற்படுவதாலும் முகத்தில் ஆங்காங்கே கருந்திட்டு மற்றும் சிவப்பு நிற புள்ளி வருகிறது. குழந்தைப்பேறுக்கும், பிக்மென்டேஷனுக்கும் சம்பந்தம் உண்டா  குழந்தைப்பேறின்போது அதிக ரத்த இழப்பு உண்டாகும். பால் ஊட்டும்போது உடலில் சத்து குறைபாடு ஏற்படும்.

இதனால்தான், கர்ப்ப காலத்திலும், குழந்தை பெற்ற பிறகும், தாய் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீரான உணவுகளை சாப்பிடவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு, தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம், சத்துக்குறைபாடு போன்ற காரணங்களால் பிக்மென்டேஷன் பிரச்சினை உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரித்தால், இந்தப் பிரச்சினை ஏற்படாது. காலநிலை மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தாலும் பிக்மென்டேஷன் பிரச்சினை வரலாம். இதற்கு வெளிப்பூச்சு கிரீம்கள் தீர்வு தராது. எத்தகைய உணவுகள் பிக்மென்டேஷனை தடுக்கும் கடல் உணவுகளான மீன், இறால், நண்டு, மீன் எண்ணெய் போன்றவையும், பாதாம், பூசணி விதை, ஆளி விதை, நெல்லிக்காய், வில்வ இலை, திரிபலா சூரணம், கருஞ்சீரகம், சோற்றுக் கற்றாழை ஆகியவையும் பிக்மென்டேஷனைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

பிக்மென்டேஷன் பிரச்சினைக்கு தீர்வு என்ன சமச்சீரான உணவு, நேரம் தவறாத தூக்கம், போதுமான தண்ணீர், உடற்பயிற்சி, அமைதியான மனநிலை போன்றவை பிக்மென்டேஷன் பிரச்சினைக்கு தீர்வாகும். மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த மருந்துகளை சாப்பிட்டு உடலில் தங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுதல், தோலில் ஏற்பட்டுள்ள பாதிப்பை பொறுத்து சிகிச்சை பெறுதல் போன்றவையும் பிக்மென்டேஷன் பிரச்சினையை குணமாக்கும். குப்பைமேனி இலை, வேப்ப இலை, அருகம்புல் ஆகியவற்றை சம அளவு எடுத்து பசை போல அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் பிக்மென்டேஷன் குணமாகும்.

#Beauty

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....