sJtB8FyjHyDU34qgWmlt 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வைத்தியரிடமிருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

Share

வைத்தியரிடமிருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

மன்னார்- நானாட்டான் பிரதேசத்தில் ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரிடமிருந்து 5 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் நேற்று முன்தினம் (07.05.2023) வைத்தியரின் தனியார் மருந்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

மருந்தக வளாகத்தினுள் நுழைந்த இரண்டு சந்தேகநபர்கள் கூரிய ஆயுதத்தால் வைத்தியரை மிரட்டி 5 இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வைத்தியரால் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, குறித்த பிரதேசத்தில் அண்மைக்காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...