qdVTbYTtKOsErrJgi5mf 1
இலங்கைஉலகம்செய்திகள்

பணிப்பெண்ணாக சென்ற இலங்கை யுவதிக்கு நேர்ந்த கொடுமை !

Share

பணிப்பெண்ணாக சென்ற இலங்கை யுவதிக்கு நேர்ந்த கொடுமை !

மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கை யுவதி ஒருவர் பல்வேறு துன்புறுத்தல்களின் பின்னர்  நேற்று (4.05.2023)  நாடு திரும்பியுள்ளார்.

மஹியங்கனை, தம்பனை பகுதியை சேர்ந் 24 வயதுடைய ஸ்வர்ணா மல்காந்தி என்ற யுவதியே பல்வேறு கொடுமைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக, அவர் தனது கிராமத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மூலம் சவூதி அரேபியா சென்று பணிப் பெண்ணாக பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் இன்று நாடு திரும்பிய ஸ்வர்ணா, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

”நான் அதிகாலையில் எழுந்து இரவு வரை வேலை செய்வேன். அந்த வீட்டுப் பெண் மிகவும் கண்டிப்பானவர். அவர் எப்போதும் விரைவாக வேலை செய்ய வேண்டும் என என்னிடம் கூறுவார்.”

”அந்த மேடம் என்னை அடிக்கடி அடிப்பார். எப்போதும் உதைப்பார். என் தலைமுடியைப் பிடித்து இழுத்து தரையில் தள்ளிவிடுவார்.

கடந்த நோன்புப் பெருநாள் தினத்தில் மேலும் இரண்டு வீடுகளில் நான் வேலை பார்க்க நேர்ந்தது. இதற்கிடையில், நான் மேடத்தின் அம்மா வீட்டில் வேலை செய்ய வேண்டியிருந்தது.

அப்போது அவரது சகோதரர் எனக்கு பல்வேறு துன்புறுத்தல்கனைச் செய்தார். ஐந்து முறை நான் சுயநினைவை இழந்தேன். அந்தச் சந்தர்ப்பங்களில் அவர் என்னிடமிருந்து தனது தேவைகளை பூர்த்தி செய்துள்ளார்.” என்று கூறியுள்ளார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...