download 21 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிறீம்கள் பயன்படுத்தும் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Share

றக்கோட்டை, கதிரேசன் வீதியில் பாவனைக்கு பொருத்தமற்ற அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கிறீம்கள் கைப்பற்றப்பட்டுள்ளமையினால் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோரை ஏமாற்றி விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 50 லட்சம் ரூபாய் சந்தை பெறுமதியான கிறீம்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழகுசாதனப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிறீம் வகைகள் மற்றும் இதர பொருட்களின் பாரியளவிலான பொருட்கள் களஞ்சியசாலை மற்றும் கடையொன்றில் இருந்து நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது, ​​இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளரால் விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்களின் இருப்பை மேற்படி திணைக்களம் கையகப்படுத்தியது.

அத்துடன், நுகர்வோரை தவறாக வழிநடத்தி சந்தைக்கு வெளியிடும் வைகயில் லேபிள்களை ஒட்டுவதற்கும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.

அவை வெளிநாட்டு பொருட்கள் எனவும் அவற்றின் தரம் அறியாமல் யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் பெண்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...