download 7 1 14
உலகம்செய்திகள்

நிலவில் தரையிறங்கும் முதல் தனியார் விண்கலம்!

Share

நிலவில் தரையிறங்கும் முதல் தனியார் விண்கலம்!

தனியார் நிறுவனத்தின் விண்கலம் ஒன்று நிலவில் தரையிறக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜப்பானைச் சேர்ந்த ‘ஐஸ்பேஸ்’  என்ற தனியார் நிறுவனமே ‘ஹகுடோ-ஆர் மிஷன் 1’ என்ற திட்டத்தின் மூலம் நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

‘ஹகுடோ-ஆர்’ விண்கலம் கடந்த டிசம்பர் மாதம் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு கடந்த மாதம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்ததுள்ளது.

அந்த  வகையில், இந்த விண்கலத்தில் ஐக்கிய அமீரகத்தின் ‘ரஷீத்’ரோவர் உள்ளது. அதனால் இந்த ரோவர் நிலவில் தரையிறங்கி ஆய்வு பணிகளை மேற்கொள்ளஉள்ளது.

தற்போது நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 கி.மீ. உயரத்தில் ‘ஹகுடோ-ஆர்’ விண்கலம் நிலவை சுற்றி வருகின்றது.

கடந்த 2010 ஆம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட  ‘ஐஸ்பேஸ்’ நிறுவனம், நிலவுக்கு வணிக ரீதியான போக்குவரத்து சேவைகளை வழங்க  திட்டமிட்டுள்ளது.

அந்த அடிப்படையில் இதற்கு முன்னர்  முன்பு நிலவில் தனியார் விண்கலங்கள் எதுவும் தரையிறங்கவில்லை என்பதுடன் நிலவில் தரையிறங்கவுள்ள  முதல் தனியார் விண்கலம் என்ற சாதனையையும் இது  படைக்கவுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...