இந்தியாவில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தின் திருச்சூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
திருவில்வமலை பகுதியைச் சேர்ந்த ஆதித்யாஸ்ரீ என்ற 8 வயது சிறுமி, வீட்டில் வீடியோ பார்த்து கொண்டிருந்த போது செல்போன் வெடித்ததில் இறந்திருக்கிறார்.
சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட காவல்துறையினர் வீட்டிற்கு சீல் வைத்தனர்.
சிறுமியின் வீட்டில் தடயவியல் நிபுணர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
செல்போன் வெடித்ததால் தான் சிறுமி உயிரிழந்தாரா என தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Leave a comment