download 5 1 16
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெடுக்குநாறி மலைக்கு பக்தர்கள் செல்ல தடைநீக்கம்! – நீதிமன்று அதிரடி

Share

வெடுக்குநாறி மலைக்கு பக்தர்கள் செல்ல தடைநீக்கம்! – நீதிமன்று அதிரடி

வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டு பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

வழக்கின் தீர்ப்பு தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வெடுக்குநாறி மலையில் ஆதி லிங்கேஸ்வரர் சிலைகளை உடைத்தது சம்பந்தமான வழக்கு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் பொலிஸார் இனந்தெரியாத நபர்களினால் வணக்கத்திற்குரிய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பாக தகவல் கொடுத்துள்ளார்கள்.

ஆனால், எவரும் கைது செய்யப்படவில்லை. யாரென்று தெரியாது தொடர்ந்து விசாரணைகளை முன்னேடுப்பதாக சொல்கின்றனர்.

கடந்த தினத்தில் மேலதிகமாக அறிக்கைகள் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதற்கமைவாக இன்று குறித்த இடத்தில் நீண்டகாலமாக பூசை வழிபாடுகள் இடம்பெற்றமைக்கான புகைப்பட ஆதாரங்களை அவர்களே சமர்ப்பித்துள்ளனர்.

அதுமட்டுமன்றி இது தொல்லியலுக்குரிய பிரதேசமென்றும் இன்று நாங்கள் செய்த விண்ணப்பத்திற்கு பதில் அளிப்பதற்கு அரச சட்டத்தரணியும் உதவியை நாடியுள்ளதாகவும் அதற்காக பிறிதொரு தினத்தையும் கேட்டிருந்தார்கள்.

எமது அரசியலமைப்பின் 10 ஆம் 14:1 உ உறுப்புரைகளின் கீழ் மத வழிபாடு என்பது எவராலும் மட்டுப்படுத்த முடியாத உரிமைகள். மரத்தையோ கல்லையோ வழிபடலாம் அதற்கு பூரண உரித்துள்ளது. அந்த மரம் வனப்பிரதேசத்தில் இருப்பதால் வணங்க முடியாது என எவரும் கூறமுடியாது. ஒரு கல் தொல்லியலுக்குரியது என்பதற்காக அதனை வணங்க முடியாது என எவரும் கூற முடியாது.

அவ்வாறு சொல்வதாக இருந்தால் அனுராதபுரத்திலும் பொலன்னறுவையிலும் சென்று எவரும் வழிபட முடியாது.

இந்த விடயங்கள் இன்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் நீதவான் இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளார்.

அதாவது வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு கொடுக்கப்பட்டு பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடைக்கப்பட்ட சிலைகளை மீள கட்டுவது சம்பந்தமாக தொல்லியல் பிரதேசம் என்ற காரணத்தினாலே மீள் அமைப்பதும் தொல்லியல் என்ற காரணத்தினாலும் அரச சட்டத்தரணியும் வந்த பிறகு ஒரு விண்ணப்பத்தை செய்வதாக சொல்லியிருக்கின்றேன் என தெரிவித்தார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...