download 10 1 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு!

Share

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோல்றீம் தோட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்து வெட்டுக் காயங்களுடன் ஐந்து பிள்ளைகளின் தாயொருவர்  இன்று (21) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

அக்கரப்பத்தனை,  சின்ன நாகவத்தை தோட்டத்தை சேர்ந்த வெங்கடாசலம் சத்தியபாமா (வயது 68)  என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர், சின்ன நாகவத்தை தோட்டத்திலிருந்து கடந்த 16 ஆம் திகதி, லிந்துலை ஹோல்றீம் தோட்டத்தில் உள்ள தனது மருமகனின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

சம்பவத்தின் பின்னர் அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல்போயுள்ளன. எனவே, நகைகளை பறிக்கும் நோக்கில் அவரை எவராவது கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மகள், மருமகன் மற்றும் இரு பேரக்குழந்தைகள் வசிக்கும் மேற்படி வீட்டில் சம்பவம் இடம்பெற்றவேளை, எவரும் வீட்டில் இருக்கவில்லை எனவும்,  தாயின் காது, கழுத்து மற்றும் மார்பு பகுதியில் பாரிய வெட்டு காயங்கள் காணப்பட்டன என்றும் தெரியவந்துள்ளது.

ஹோல்றீம் தோட்ட பாடசாலையில் கல்வி கற்கும் மேற்படி வீட்டைச் சேர்ந்த சிறுமி,  இன்று (21) காலை தண்ணீர் பருக வீட்டுக்கு வந்திருந்த வேளையில் வீட்டில் இரத்த வெள்ளத்துடன் தனது பாட்டி  கிடந்ததை அவதானித்து  கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அயலவர்கள், லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

நீதவானின் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும்.

சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசேட குழுவொன்றை அமைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...