download 3 1 7
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்கள்!

Share

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து வடக்கு பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியொன்றுக்கு விடுமுறையை கழிப்பதற்கு சென்ற இரண்டு இலங்கையர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் 59 வயதான தந்தை மற்றும் 21 வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

எட்டு வருடங்களுக்கும் மேலாக மெல்போர்னில் உள்ள போக்குவரத்து நிறுவனத்தில், உயிரிழந்த தந்தை பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள், குயின்ஸ்லாந்தில் கிரிஸ்டல் கேஸ்கேட்ஸ் நீர்வீழ்ச்சியை பார்வையிட்டதுடன், அங்கு நீராடியுள்ளனர்.

இதன்போது தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த தந்தை முதலில் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரது மகனும் மகளும் அவரை மீட்க முயன்று நீரோட்டத்தில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் மகள் காப்பாற்றப்பட்ட போதிலும் இந்த சம்பவத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...