download 4 1 4
இந்தியாஉலகம்செய்திகள்

காணாமல் போன பெண்ணை கடவுளாக வழிபட்ட மக்கள்!

Share

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நர்மதாபுரத்தை சேர்ந்த மூதாட்டி ஜோதி ரகுவன்ஷி. இவர் ஜபல்பூரில் உள்ள நர்மதா ஆற்றில் நடந்து செல்வது போல வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இதனை வைரலாக்கிய நெட்டிசன்கள் ஆற்றில் தெய்வீக உருவம் காணப்படுவதாக தகவல் பரப்பினர். இதனால் ஆற்றங்கரையில் ஏராளமான மக்கள் திரண்டதால் அங்கு கூட்டம் அலைமோதியது.

சிறிது நேரத்தில் ஆற்றில் இருந்து ஜோதிரகுவன்ஷி வெளியே வந்தார். அப்போது அவரை கடவுளாக (நர்மதா தாய்) வழிபட தொடங்கினர்.

இதனால் அங்கு போலீசாரும் விரைந்து சென்றனர். போலீசார் ஜோதி ரகுவன்ஷியிடம் விசாரித்த போது அவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியவர் என்பது தெரியவந்தது.

மேலும் வேண்டுதலுக்காக நர்மதா ஆற்றை சுற்றி வலம் வந்துள்ளார். ஆற்றங்கரையோரமாக அவர் நடந்து சென்ற போது சில இடங்களில் தண்ணீர் குறைவாக இருந்துள்ளது. இதனால் அவர் ஆற்றில் இறங்கி நடந்து சென்றுள்ளார்.

சில இடங்களில் நீந்தி சென்றுள்ளார். ஆற்றங்கரைகளில் தேவைப்படுவோருக்கு நாட்டு மருந்துகள் சிலவற்றை வழங்கியுள்ளார். இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அது வைரலானதால் மக்கள் திரண்டதும் தெரியவந்தது. ஆனால் மூதாட்டி ஜோதிரகுவன்ஷி கூறுகையில் நான் தண்ணீர் மேல் நடக்கவில்லை.

நான் பெண் தெய்வமும் அல்ல. வேண்டுதலுக்காக ஆற்றை சுற்றி வருகிறேன் என்றார். இதையடுத்து நர்மதாபுரத்தில் உள்ள ஜோதிரகுவன்ஷி உறவினர்களை போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் வந்ததும் அவர்களுடன் ஜோதிரகுவன்ஷியை அனுப்பி வைத்தனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....