download 8 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இனவாதத்தை தூண்டும் சரத் வீரசேகர!

Share
வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவர்கள் அண்மையில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தமிழ் மக்கள் சமஷ்டியை கோரவில்லை தமிழ் அரசியல்வாதிகளும் பிரிவினையை விரும்பும் புலம்பெயர் அமைப்புக்களும் தான் கோருகின்றனர் என அப்பட்டமான இனவாத பொய்யுரைப்பை கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.
தமிழர்களை பொறுத்தவரை இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து தங்களது மறுக்கப்பட்ட தன்னாட்சி உரிமையை வேண்டி 74 ஆண்டுகளாக சமஷ்டி கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்ற அரசியல் கட்சிகளுக்கே வடக்கு கிழக்கில் மாகாணங்களில்  பெரும்பாண்மை மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். இது ஒவ்வொரு தேர்தல்களிலும் நிரூபணமாகியுள்ளது இந்த உண்மையை மறைத்து இனவாதத்தை தூண்டுகிறார் வீரசேகர.
1952,1956,1960 ஆம்  ஆண்டுகளில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் தமிழ்க் கட்சிகள் தேர்தல்களில் மக்களை நோக்கி சோறா? சமஷ்டியா? வேண்டும் என கேட்ட போது சுதந்திர சமஷ்டியே வேண்டும் என பெரும்பாண்மை மக்கள் ஆணையை வழங்கினர். இதனை இலங்கையின் தேர்தல் வரலாறு தெளிவாக கூறுகிறது.
1977 இல்  நடைபெற்ற தேர்தலில்   வடகிழக்கு மாகாணங்களில்  தமிழ்க் கட்சிகளின் கூட்டணி முன் வைத்த  சமஸ்டி கோரிக்கையை தாண்டி தனிநாட்டுக் கோரிக்கைக்கு 99% மக்கள் ஆணை வழங்கினார்கள்  உண்மையாக தனி நாட்டிற்கான ஒரு பொதுசன வாக்கெடுப்பாகவே அமைந்தது.1977  இல்  தமிழர் தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாண மக்கள் பிரிந்து செல்வதற்கான மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர்.
சுதந்திர தாகத்துடன் தொடர்ந்து  தங்களது அபிலாசையை மக்கள் ஆணை மூலம் வெளிப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை இழிபுபடுத்தி இனவாத தீயை வளர்த்து அதிகாரத்தை பெற நினைக்கும் பித்தலாட்ட நடவடிக்கைகளை சரத் வீரசேகர கைவிட வேண்டும்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...