IMG 20230404 WA0022
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியின் கால்கோள்விழாவும் ஆசிரியருக்கான கௌரவிப்பு நிகழ்வும்!

Share
சங்கானை கல்வி கோட்டத்திற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியில் கால்கோள் விழாவும் 32 வருட சேவையாற்றிய ஆசிரியருக்கான கௌரவிப்பு நிகழ்வும் நேற்றையதினம் சுழிபுரம் மேற்கு  கலைமகள் முன்பள்ளி முகாமைத்துவ குழுத்தலைவர் வ.கோகுலநேசன் தலைமையில் மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக முதலாம் தரத்திற்கு  சென்ற கலைமகள் முன்பள்ளியின் மாணவர்களுக்கு பிரிவுபசார நிகழ்வும் தொடர்ச்சியாக புதிதாக முன்பள்ளிக்கு வருகைதந்த மாணவர்களுக்கான கால்கோள் விழாவும் இடம்பெற்றது.
தொடர்ச்சியாக முன்பள்ளியில 32 வருட காலமாக பணியாற்றி 60 வது அகவையை பூர்த்தி செய்த கலைமகள் முன்பள்ளியின் சிரேஷ்ட ஆசிரியர் நின்மதி பன்னீர் செல்வத்திற்கான கௌரவிப்பு நிகழ்வுகள் சமூக மட்ட அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து முன்பள்ளியின் மாதாந்த செயற்பாட்டின் ஒரு அங்கமாக ஆத்திசூடி மனன போட்டி முன்னெடுக்கப்பட்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
 கலைமகள் முன்பள்ளி முகாமைத்துவ குழுதலைவர்வர் கோகுலநேசன், கலைமகள் முன்பள்ளி ஆசிரியர்கள்,கலைமகள் முன்பள்ளி மாணவர்கள் ,பெற்றோர்கள், ஆசிரியர்கள் ,சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
IMG 20230404 WA0024 IMG 20230404 WA0026 IMG 20230404 WA0028
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...