லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’ (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததையடுத்து சமீபத்தில் நிறைவுற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘லியோ’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் 29-ஆம் திகதி தொடங்கப்படவுள்ளதாகவும் இங்கு படப்பிடிப்பு முடிந்தவுடன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ஹைதராபாத் செல்லவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
#Cinema
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment