honney
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

சரும அழகை அதிகரிக்க தேனை பயன்படுத்துங்கள்

Share

தவறான உணவு பழக்கம், அதிக காற்று மாசு, இரவு நேரத்தில் தாமதமாக உறங்குதல், அதிக கெமிக்கல் கொண்ட கிரீம்களை பயன்படுத்துதல் இப்படிபட்ட வாழ்க்கை முறை மாற்றத்தால் முகத்தின் ஆரோக்கியம் கெட்டு பல வித பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதனால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், கரு வளையங்கள், தழும்புகள் ஆகியவை உண்டாகுகின்றன. இது போன்ற பாதிப்புகள் அனைத்தையும் எளிதில் குணமாக்க ஆயுர்வேத மருத்துவ குணம்கொண்ட தேன் உதவுகிறது என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை இயற்கையாக குணமாக்கும் தன்மை தேனில் உள்ளது. இதில் உள்ள என்சைம்கள், தாவரங்களின் மூலப்பொருட்கள் மற்றும் இதிலுள்ள நல்ல பாக்டீரியா ஆகியவை ஒன்று சேர்ந்து உங்களுக்கு சிறந்த முக அழகை தரும். தூய்மையான, பதப்படுத்தப்படாத தேன் உங்கள் முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகளை நீக்கி பளபளப்பான சரும அழகை உண்டாக்கும். மேலும் இதன் இயற்கை தன்மை தோல் நோய்கள் மற்றும் அரிப்புகள் வராமல் தடுத்து உங்களை எப்போதும் இளமையாக வைக்கும்.

தேனில் இயற்கையாகவே ஈரப்பதம் அளிக்கும் மூலப்பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே முகத்திற்கு தேனை பயன்படுத்தினால் மிக விரைவிலே மங்கலான உங்கள் முக அழகு பொலிவாக மாறிவிடும். சிறிது எலுமிச்சை சாற்றுடன் தேனை கலந்து முகத்தில் தடவி வருவதால் கரும்புள்ளிகளை எளிதில் விரட்டலாம். அத்துடன் உங்கள் சருமத்தின் நிறத்தை கூட்டும், முகத்தை மென்மையாக்கும், முகத்தின் நிறத்தை பளபளப்பாக்கும், என்றென்றும் இளமையான தோற்றத்தை தரும். தேனில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைட் முகத்தில் உள்ள தழும்புகளை மறைய வைக்க உதவும் என அழகியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் அதிகமான பருக்களால் அவதிப்பட்டு வருகின்றனர். பருக்கள் உருவாகி மறைந்து விடாமல், அந்த இடத்தில் பெரிய தழும்புகளையும் உருவாக்கி விடுகிறது. பருக்களையும் அதனால் ஏற்படும் தழும்புகளையும் மிக சுலபமாக நீக்க சிறிது நெய்யுடன் தேன் கலந்து தடவி வாருங்கள். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள புண்கள், வீக்கம், வடுக்கள் போன்றவை எளிதில் குணமாகும்.

கடைகளில் விற்கும் பதப்படுத்தட்ட தேனை முகத்திற்கு பயன்படுத்த கூடாது. காரணம், கடைகளில் விற்கப்படும் தேனை முழுவதுமாக சூடு படுத்துகின்றனர். எனவே அதில் உள்ள இயற்கை பாக்டீரியா, என்சைம்கள் குறைந்து விடுகிறது. எனவே சரும பாதுகாப்பிற்கு சுத்தமான, பதப்படுத்தபடாத தேனை பயன்படுத்த வேண்டும்.

#Beauty

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1612945 varalaxmi
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநராக அவதாரம் எடுத்த வரலட்சுமி சரத்குமார்! – சரஸ்வதி படத்திற்காகப் புரட்சிகரமான புரோமோ வீடியோ வெளியீடு!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் எனப் பல மொழிகளில் தனது சிறப்பான நடிப்பால் முத்திரை...

26 698c2e116f1d6
சினிமாபொழுதுபோக்கு

ஜெயிலர் 2-வில் இணைந்தார் எஸ்.ஜே. சூர்யா! – சிவராஜ்குமார் உறுதி செய்த அதிரடித் தகவல்!

2023 ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாகத் தயாராகி...

26 698bf0b08e0b1
சினிமாபொழுதுபோக்கு

வசூலில் மிரட்டும் வித் லவ்! – 5 நாட்களில் ரூ. 15 கோடியைத் தாண்டியது! அபிஷன் ஜீவிந்திற்கு ஜாக்பாட்!

கடந்த ஆண்டு டூரிஸ்ட் பேமிலி என்ற மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், தற்போது...

26 698ad61d9258c
சினிமாபொழுதுபோக்கு

இது தியேட்டர் கிடையாது! – பந்தயக் களத்தில் ரசிகர்களை அதிரடியாகக் கண்டித்த நடிகர் அஜித்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார், தற்போது ஐரோப்பா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில்...