தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இதில் சட்ட ரீதியாக விதிகள் மீறப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இருவரும் செயல்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் அறிக்கை வெளியானது.
இந்நிலையில் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தங்களது இரட்டை குழந்தைகளுடன் மும்பை விமான நிலையத்திற்குள் நடந்து செல்லும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#Cinema
Leave a comment