thirumurugan
இலங்கைசெய்திகள்

யாழில் பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!!

Share

யாழ். மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைந்து செல்லும் நிலையில் இன்னும் சில வருடங்களில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயமுள்ளதாக சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் எச்சரித்துள்ளார்.

யாழ்.உரும்பராய் ஞானவைரவர் அறக்கட்டளை நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கற்றல் உபரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

யாழ்.தீவகத்தில் பல பாடசாலைகள் போதியளவு மாணவர் இன்மையால் மூடப்பட்டுள்ள அதேவேளை வலிகாமம் கிழக்கில் இரண்டு பாடசாலைகள் அண்மையில் மூடப்பட்டன. பாடசாலைகளை மூடுவதற்கு மாணவர்கள் இல்லாமையே காரணமெனக் கூறப்பட்டாலும் யாழ். மாவட்டத்தில் பல தனியார் பாடசாலைகள் முளைத்த வண்ணமுள்ளன.

யாழ்ப்பாணத்தில் புகழ் பூத்த கல்லூரிகளில் ஒன்றாகத் திகழ்ந்த உரும்பிராய் இந்துக் கல்லூரி மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் அதனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

உரும்பிராய் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற பல மாணவர்கள் உலகளாவிய நீதியில் உயர் பதவிகளை வகித்துள்ளதுடன் இன்றும் பல உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். இவ்வாறான கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து செல்லும் நிலையில் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை இந்தப் பாடசாலை எதிர்நோக்கியுள்ளது.

அத்துடன் யாழ். மாவட்டத்திலுள்ள அறக்கட்டளை நிறுவனங்களில் ஐந்துக்கும் குறைவான நிறுவனங்களே பாராளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள அறக்கட்டளை நிறுவனங்களில் முஸ்லிம்களின் அறக்கட்டளை நிறுவனங்களே அதிகளவில் பாராளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்தபோது முஸ்லிம் அமைப்புகள் சார்ந்து இயங்கும் பெரும்பாலான அறக்கட்டளை நிறுவனங்களை இலங்கைப் பாராளுமன்றத்தில் பதிவு செய்தார்.

இலங்கையில் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியாகவும் முஸ்லிம்கள் சார்ந்து தனியான பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன.ஆனால் தமிழ் மக்கள் சார்ந்து எந்தவொரு பல்கலைக்கழகமும் ஆரம்பிக்கப்படவில்லை.

எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் தமது கடமைகளை உரிய வகையில் நிறைவேற்றாது போனால் எமது இனத்தின் பரம்பல் குறைந்து செல்வதுடன் எதிர்காலத்தில் பல்வேறு சவால்களை தமிழ் மக்கள் எதிர்நோக்க வேண்டியேற்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...