Vegetable chapati
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

வெஜிடபிள் சப்பாத்தி

Share

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 2 கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – அரை டீஸ்பூன்
காய்கறிக்கலவை (பட்டாணி, பீன்ஸ், கேரட் போன்றவை) – ஒரு கப்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – அரை கப்
இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லித்தழை அரைத்தது – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சம்பழச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை

காய்கறிகளை அளவான தண்ணீரில் உப்பு சேர்த்து, வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, அரைத்த விழுதுகள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.

அதனுடன், மசித்த உருளைக்கிழங்கு, மசித்த காய்கறி கலவை, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.

கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளுங்கள். பிசைந்த மாவிலிருந்து, மெல்லிய சப்பாத்திகள் திரட்டி, இரு சப்பாத்திகளுக்கு நடுவே காய்கறி பூரணத்தை பரத்தி, ஓரங்களை ஒட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் இருபுறமும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது சூப்பரான வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 1
சினிமாபொழுதுபோக்கு

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ...

10 4
சினிமாபொழுதுபோக்கு

தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து...

9 4
சினிமாபொழுதுபோக்கு

38 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கிறாரா சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கில் வெளிவந்த Ye Maaya Chesave திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்...

11 3
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்.. பூரிப்பில் ஷாலினி!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது...