FkFWM7BaYAI2tr3 e1671207341945
சினிமாபொழுதுபோக்கு

பெற்றோர் ஆன அட்லி-ப்ரியா

Share

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லியின் மனைவி ப்ரியா அட்லி கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடித்த ’தெறி’, ‘மெர்சல்’, மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய அட்லி, தற்போது ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் ‘ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அட்லி – பிரியா திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் சமீபத்தில் ப்ரியா கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் கர்ப்பகால புகைப்படங்களும் அவர்களது சமூக வலைதளத்தில் வைரலானது என்பது தெரிந்ததே. மேலும் ப்ரியா அட்லியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தளபதி விஜய் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் அட்லி-ப்ரியா அட்லி தம்பதிகள் பெற்றோர் ஆகி உள்ளதாகவும் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு அட்லி மற்றும் ப்ரியாவின் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவிந்து வருகின்றனர்.

#Cinema

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...