Elon Musk 16494179903x2 1
உலகம்செய்திகள்தொழில்நுட்பம்

பதவி விலகுகிறார் எலான்??

Share

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை ஏற்ற அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். 50 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். மேலும் டுவிட்டர் நிறுவனத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.

இதற்கிடையே டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் தான் தொடர வேண்டுமா என்று டுவிட்டரில் எலான் மஸ்க் கருத்து கணிப்பு நடத்தினார். 1.7 கோடி பேர் பங்கேற்ற இந்த கருத்து கணிப்பில் அவர் பதவி விலக வேண்டும் என்று 57.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். 42.5 சதவீதம் பேர் எலான் மஸ்க், பதவியில் தொடர விருப்பம் தெரிவித்தனர்.

பெரும்பாலானோர், பதவி விலக வேண்டும் என்று தெரிவித்ததால் அதை ஏற்று எலான் மஸ்க், பொறுப்பில் இருந்து விலகுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில்,

டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை விரைவில் ராஜினாமா செய்வேன். அந்த பதவிக்கு ஒரு முட்டாள்தனமான நபரை தேடிப்பிடித்து விட்டு ராஜினாமா செய்வேன். அதன் பிறகு மென்பொருள், சர்வர் பணிகளை மட்டும் ஏற்று நடத்துவேன் என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து எலான் மஸ்க்கை பின் தொடர்பவர்கள் கூறும்போது, ‘தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு ஏற்கனவே ஒருவரை தேர்வு செய்துவிட்டு எலான் மஸ்க் இந்த கருத்து கணிப்பை நடத்தியது போல தெரிகிறது என்று தெரிவித்துள்ளனர்.

#world #technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...