accident
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விபத்தை ஏற்படுத்தியவர் விமான நிலையத்தில் கைது!

Share

கொழும்பு -கொள்ளுப்பிட்டி பகுதியில் விபத்​தொன்றை ஏற்படுத்தி விட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்ற 26 வயதான இளைஞர், நேற்று (12) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த வௌ்ளிக்கிழமை(10) காலை கொள்ளுபிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 58 வயதுடைய ஓட்டோ சாரதி ஒருவர் உயிரிழந்த நிலையில், சொகுசு காரை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சந்தேகநபர், அன்றைய தினமே டுபாய்க்கு தப்பிச் சென்றிருந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு (12) 9.50 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே.648 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர், குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பின்னர் சந்தேகநபர், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், கொள்ளுப்பிட்டி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று, சந்தேகநபரை கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...