Getty standard american english 83297359 583fb4d45f9b5851e58d7214 1
உலகம்செய்திகள்

ஓரினச் சேர்க்கையாளர் திருமண மசோதா நிறைவேற்றம்!

Share

அமெரிக்காவில் கடந்த 2015-ம் ஆண்டு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது.

இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, நாடு முழுவதும் கருக்கலைப்புக்கு தடைவிதித்து சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. இதை தொடர்ந்து, ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கான சட்ட அங்கீகாரத்தையும் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்யலாம் என்கிற அச்சம் எழுந்தது.

இதனைத் தவிர்க்கும் வகையில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமண உரிமையை பாதுக்கும் மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தின் செனட்சபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் செனட் சபையில் இந்த மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த 12 உறுப்பினர்கள் உள்பட 61 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

36 பேர் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் செனட் சபையில் அந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. இதையடுத்து அந்த மசோதா தற்போது பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அங்கும் மசோதா நிறைவேறும் பட்சத்தில் அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஜோ பைடன் அதில் கையெழுத்திட்டதும் அது சட்டமாகும்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...