ezgif 2 4643a44fa9
உலகம்செய்திகள்

தோல் புற்றுநோய் – அவுஸ்திரேலியாவில் நிர்வாண பிரச்சாரம்!

Share

சர்வதேச அளவில் தோல் புற்றுநோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அவுஸ்திரேலியா திகழ்கிறது. அங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் சூரிய கதிர்கள் உடல் மீது படும் மனிதர்களுக்கு தோல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவு என மருத்துவர்கள் தெரிவித்து வரும் நிலையில், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக தோல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று விழிப்புணர்வு போட்டோ சூட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 2,500 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

கடற்கரையில் சூரிய உதயத்தின்போது தங்கள் ஆடைகளை களைந்த அவர்கள் நிர்வாணமாக நின்று கொண்டும், கடற்கரையில் படுத்துக் கொண்டும், தோலின் மீது சூரிய கதிர்கள் படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்விற்காக கடற்கரையின் ஒரு பகுதி மட்டும் தற்காலிகமாக நிர்வாண கடற்கரையாக அறிவிக்கப் பட்டிருந்தது. பிரபல புகைப்படக்கலைஞர் ஸ்பென்சர் துனிக் பல்வேறு கோணங்களில் இதனை படம் பிடித்தார்.

இது குறித்து பேசிய நிகழ்ச்சி ஏற்பட்டாளர் ஸ்காட் மாக்ஸ், இந்த கலை படைப்பு மக்களின் கவனத்தை ஈர்க்கும் மற்றும் புற்றுநோயிலிருந்து நமது மக்களைக் காப்பாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால், புற்றுநோய் காரணமாக யாரும் இறக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம் என கூறினார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...