1794556 fifa
செய்திகள்விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து – கத்தாரில் இன்று பிரமாண்ட ஆரம்பம்

Share

உலகின் 2-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து (FIFA) போட்டியாகும்.

இந்நிலையில், 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

டிசம்பர் 18-ம் தேதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன.

போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. இந்த 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஏ பிரிவு – கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து

பி பிரிவு – இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

சி பிரிவு – அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

டி பிரிவு – பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா

இ பிரிவு – ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான்

எப் பிரிவு – பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

ஜி பிரிவு – பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

எச் பிரிவு – போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். டிசம்பர் 2-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றான நாக் அவுட்டுக்கு தகுதி பெறும். டிசம்பர் 3 முதல் 6-ம் தேதி வரை 2-வது சுற்று நடைபெறும். இதில் 16 நாடுகள் விளையாடும். அதில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்குள் நுழையும்.

டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் கால் இறுதியும், 13 மற்றும் 14-ம் தேதிகளில் அரை இறுதி ஆட்டங்களும் நடைபெறும். இறுதிப் போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடக்கிறது. உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா-தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். இதனால் யார் உலக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க நாளில் ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. ஏ பிரிவில் உள்ள கத்தார்-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முன்னதாக இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட தொடக்க விழா டோகாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அலகோர் அல்பயத் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்ற அணி உலக கோப்பையை வெல்லுமா? அல்லது புதிய அணி கோப்பையை கைப் பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு முறை சாம்பியனான இத்தாலி இந்த முறை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

#sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 215
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு: குற்றப் பிரமுகரின் சகோதரர் உயிர் தப்பினார்!

அஹுங்கல்லா பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘லோக்கு பட்டி’ என்பவரின் சகோதரரான ‘பொடி பட்டி’...

world 217
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விடுமுறை முடிந்து கொழும்பு திரும்புவோருக்காக விசேட இரயில் சேவைகள் அறிவிப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தனது சொந்த ஊர்களில் கொண்டாடிவிட்டு மீண்டும் கொழும்பு திரும்பும்...