இணுவில் பகுதியில் 17 வயதுச் சிறுவன் மீது ரவுடிக்கும்பலால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
உரும்பிராயைச் சேர்ந்த 17 வயதுடைய முருகதாஸ் மனோஜ் என்ற சிறுவனே வாள் வெட்டுக்கு இலக்காகி உள்ளார்.
இணுவிலில் உள்ள அலங்கார நிலையம் ஒன்றில் வேலை செய்யும் குறித்த சிறுவன் நேற்று (25) வீடு நோக்கிச் செல்லும் போது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பலினால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
#Srilankanews
Leave a comment