நாடாளுமன்றத்தில் இடம்பெறும் அமர்வுகள் மற்றும் விவாதங்களை பார்வையிடுவதற்கு மாணவர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் நாட்களில் நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும் நாடாளுமன்ற விவாதங்களைப் பார்வையிடுவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து முன்வைத்த யோசனைக்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு நேற்று (21) அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உள்ள பொதுமக்கள் கலரியில் இருந்து விவாதங்களைப் பார்வையிடுவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
#SriLankaNews
Leave a comment