சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு! செய்வது எப்படி?

Share
CHETTINAD SURA MEEN KUZHAMBU SHARK FISH CURRY
Share

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு வீட்டிலே எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

download 3 1

தேவையான பொருட்கள்:

  • வஞ்சிர மீன் – 8 துண்டுகள்
  • புளி – 1 எலுமிச்சை அளவு
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  • கொத்தமல்லி – சிறிது
  • உப்பு – தேவையான அளவு
  • துருவிய தேங்காய் – 1/4 கப்
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • தக்காளி – 1 (நறுக்கியது)
  • பெரிய வெங்காயம் – 1/2 (நறுக்கியது)
  • சின்ன வெங்காயம் – 6
  • வெந்தயம் – 1 டீஸ்பூன்
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 10
  • பூண்டு – 5 பல்
  • தக்காளி – 1 (நறுக்கியது)
  • கறிவேப்பிலை – சிறிது
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

  • முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, அதில் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி தனியாக வைத்து பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைக்க கொடுத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
  • பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு, அத்துடன் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  • பிறகு வெதுவெதுப்பான நீரில் புளியை 1/2 மணிநேரம் ஊற வைத்து, 1/4 கப் சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பின் அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
  • அடுத்து அதில் தக்காளியைப் போட்டு, பச்சை வாசனை போக நன்கு வதக்கி விட வேண்டும்.
  • பின் அத்துடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 20 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் புளிச்சாறு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
  • எப்போது குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரிகிறதோ, அப்போது மீன் துண்டுகளை சேர்த்து மீன் நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவி 1 மணிநேரம் கழித்து பரிமாறினால், செட்டிநாடு மீன் குழம்பு ரெடி!
Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 1
சினிமாபொழுதுபோக்கு

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ...

10 4
சினிமாபொழுதுபோக்கு

தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து...

9 4
சினிமாபொழுதுபோக்கு

38 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கிறாரா சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கில் வெளிவந்த Ye Maaya Chesave திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்...

11 3
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்.. பூரிப்பில் ஷாலினி!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது...