02 7 300x150 2
உலகம்செய்திகள்

கொத்து கொத்தாக கரையொதுங்கும் திமிங்கலங்கள்!

Share

நியூசிலாந்து கடற்பகுதியில் 450 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரைப் பகுதிகளில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிரிழக்கும் சம்பவங்கள் உலகம் முழுவதும் அவ்வப்போது நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் கூட பல பகுதிகளில் திமிங்கலங்கள் பல முறை கரை ஒதுங்கி இறந்திருக்கின்றன.

மணப்பாடு கடற்கரையில் 1973-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் திக தி 147 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஓரிரு நாட்கள் உயிரோடு இருந்த அவை பின்னர் இறந்துவிட்டன. சமீப ஆண்டுகளாக அவு ஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் கடற்கரைப் பகுதிகளில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

நியூசிலாந்தின் சதாம் மற்றும் பிட் தீவுகள் அதிகளவில் திமிங்கலங்கள் வசிக்கும் பகுதியாக இருந்து வருகின்றன. சாத்தம் தீவில் கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி சுமார் 215 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. இதனைத் தொடர்ந்து, அதற்கு மறுநாளே அருகிலுள்ள பிட் தீவில் 240 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. மொத்தமாக 455 திமிங்கலங்கள் இறந்துள்ளன. இவ்வளவு திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இறந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய பிறகு உயிரோடு இருக்கும் பட்சத்தில் அதனை மீண்டும் கடலில் மிதக்க விடுவதற்கான முயற்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், சதாம் மற்றும் பிட் தீவுகளில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் அப்படியே கடந்த சில நாட்களாக கிடக்கின்றன. கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நூற்றுக்கும் குறைவான மக்கள் வசிக்கும் அந்த தீவில் தளவாடப் பிரச்சினைகளைத் தவிர, அவற்றை மீண்டும் நீரில் மிதக்கச் செய்தால், சுறாக்கள் அவற்றை உணவாக்கிக் கொள்ளக் கூடும் என்ற அச்சுறுத்தல் காரணமாக திமிங்கலங்கள் கருணைக்கொலை செய்யப்பட்டதாக கடல் பாதுகாப்புத் துறையின் தொழில்நுட்ப ஆலோசகர் டேவ் லுண்ட்கிஸ்ட் தெரிவித்தார். இருப்பினும் திமிங்கலங்கள் இவ்வாறு கரை ஒதுங்கி இறப்பதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

கடலின் ஆழமான பகுதிகளில் உயிர் வாழும் வெள்ளை சுறாக்கள் மிகவும் ஆபத்தானவை. இத்தகைய சுறாக்களால் மற்ற மீன் வகை உயிரினங்களுக்கு அதிக அளவில் ஆபத்து நிலவுகிறது. இவைகளில் வேட்டையாடும் தன்மையால் கொலையாளி திமிங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. அத்தகைய சுறாக்களினால் தான் திமிங்கலங்களின் வாழ்வியல் பாதிக்கப்படுவதாக உயிரியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.”

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...

MediaFile 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி முகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...