1774142 vijay4
சினிமாபொழுதுபோக்கு

விஜயுடன் காதல்! – உறுதிப்படுத்திய ராஷ்மிகா?

Share

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்த ராஷ்மிகா மந்தனா தற்போது வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஷ்மிகாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிவாகி சில காரணங்களால் நின்று போனது. மேலும் சிலருடன் இணைத்தும் கிசுகிசுக்கப்பட்டார்.

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும், கீதா கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி தாறுமாறாக இருந்தது. இந்த படம் வசூலை அள்ளியது. கீதா கோவிந்தம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஜோடி டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்தனர். இந்த இரண்டு படங்களுமே வெற்றியடைந்ததற்கு இவர்களது கெமிஸ்ட்ரி தான் முக்கிய காரணம் என்று பேசப்பட்டது.

டியர் காம்ரேட் படத்தில் ஜோடியாக நடித்தபோது இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த கிசுகிசு உண்மை என்பது போல டியர் காம்ரேட் படத்தில் முத்த காட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என கூறி வந்தனர்.

அவ்வபோது இவர்கள் ஜோடியாக ஊர் சுற்றும் புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ந்து வெளியே வந்து கொண்டிருந்தது. அந்த வகையில், இந்த ஜோடி தற்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். இதற்காக இருவரும் தனித்தனியே விமான நிலையத்திற்கு வந்தனர். ஆனால், இருவரும் ஜோடியாக ஒரே விமானத்தில் மாலத்தீவுக்கு சென்றுள்னனர்.

ராஷ்மிகா மும்பை விமான நிலையத்தில் காணப்பட்டார். அவர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, நடிகர் விஜய் தேவரகொண்டாவும் விமான நிலையத்திற்குள் நுழைந்தார். இருவரும் ஜோடியாக மாலைதீவு செல்லும் விமானத்தில் ஏறியதால் இவர்களைப் பற்றிய காதல் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.

#Cinema

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
download 3
பொழுதுபோக்குசினிமா

ஒஸ்கார் வரலாற்றில் புதிய உச்சம்: 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சின்னர்ஸ் உலக சாதனை!

இயக்குநர் ரியான் கூக்ளர் (Ryan Coogler) இயக்கத்தில் உருவான ‘சின்னர்ஸ்’ (Sinners) எனும் திகில் திரைப்படம்,...

26 69710ff1c7c80
பொழுதுபோக்குசினிமா

14 வயதாகியும் செல்போன் இல்லை! மகள் ஆராத்யாவை கண்டிப்புடன் வளர்க்கும் ஐஸ்வர்யா ராய்!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதியரின் மகள் ஆராத்யா பச்சன், ஒரு...

image 3 2rcm9
பொழுதுபோக்குசினிமா

அமிதாப் பச்சனின் வீட்டில் தங்கக் கழிவறை 10 கோடி ரூபாய் பெறுமதியா? வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட்டின் ஜாம்பவான் அமிதாப் பச்சனின் மும்பை இல்லமான ‘ஜல்சா’வில் உள்ள தங்கக் கழிவறை (Golden Toilet)...

26 697099df586de
பொழுதுபோக்குசினிமா

இன்று 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் சந்தானம்!

சின்னத்திரையிலிருந்து தற்போது பலரும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார்கள். ஆனால், அவர்கள் யாவரும் வெற்றிக்கனியை பறிக்கிறார்களா என்பதே...