இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களுக்கு எதிரான மனு விசாரணைக்கு

Share

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி இவர்களுக்கு எதிராக குறித்த இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன, நீச்சல் சாம்பியன் ஜூலியன் போலிங் உள்ளிட்டோரால் அதில் ஒரு அடிப்படை உரிமை மனு சமர்ப்பிக்கப்ட்டிருந்ததுடன், மற்றைய மனுவை திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் மஹீம் மெண்டிஸ் உள்ளிட்ட குழுவினர் தாக்கல் செய்திருந்தனர்.

இதன்படி, சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தின் பின்னர் டெங்கு அபாயம் அதிகரிப்பு: கடந்த வாரம் 616 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களின் பின்னர் டெங்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக...

images 1 5
இலங்கைசெய்திகள்

6 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 27 கிலோ கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது,...

djhfnkie 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரயில் தொடருந்துப் பாதை புனரமைப்புக்கு $400 மில்லியன் செலவு: சுகாதார நிறுவனங்கள் 90% மீட்டெடுப்பு!

சீரற்ற காலநிலை அனர்த்தங்கள் காரணமாகச் சேதமடைந்த தொடருந்துப் பாதைகளைப் புனரமைக்க சுமார் 400 மில்லியன் அமெரிக்க...

Udaya Gammanpila
அரசியல்இலங்கைசெய்திகள்

அனர்த்த நிதித் திரட்டல்: விஜித்த ஹேரத் தோல்வி, கதிர்காமரின் அணுகுமுறை பின்பற்றப்படவில்லை – உதய கம்மன்பில குற்றச்சாட்டு!

அனர்த்த நிவாரண நிதியைத் திரட்டுவதில் தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன்...