download 1 8
ஏனையவைமருத்துவம்

பற்களில் உள்ள கறைகளை போக்க வேண்டுமா? சில எளிய வழிகள் இதோ

Share

பற்களில் உள்ள கறைகளை போக்க எளிய சில வழிமுறைகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • கொய்யாப்பழம், ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிடுவதால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.
  • கிராம்பு பொடியுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து மிதமான சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.
  • இரவு சாப்பாடு முடித்து படுக்கச் செல்வதற்கு முன்பு ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். இதனை தேய்த்தபிறகு வேறு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. மறுநாள் காலை எழுந்து வாயை கொப்பளிக்கலாம். இரவு முழுவதும் பற்களில் படர்ந்திருப்பதால் ஆரஞ்சு பழத்தோல் கறையை போக்குவதுடன் கிருமிகளையும் அழித்துவிடும்.
  • ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இரண்டு எடுத்து நன்றாக அரைத்து, தினமும் காலையில் பல் தேய்த்தவுடன், சிறிதளவு எடுத்து லேசாக பற்களில் தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்களுக்கு செய்து வர, பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.
  • வெள்ளை எள்ளு விதையை, நன்றாக பொடி செய்து பற்களின் மேல் தேய்த்து வந்தால், பற்களின் மேல் உள்ள கறைகள் நீங்கிவிடும்.
  • பேக்கிங் சோடா, கல் உப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து பற்களின் மீது தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஏனையவை

“ஹீரோக்களுக்காக மட்டுமே சினிமா”: நடிகை ராதிகா ஆப்தேவின் அதிர்ச்சிக் கருத்து!

Rajinikanth Radhika Apte Actress இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ராதிகா ஆப்தே, தான்...

download
ஏனையவை

தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளி ஏமாற்றம்: நாளாந்த வேதனம் குறித்து வடிவேல் சுரேஷ் கருத்து

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ், இந்த முறை தீபாவளிக்கு...

ஏனையவை

வெளிநாட்டு வேலைக்குச் செல்வோர் கவனத்திற்கு: சலுகை விலையில் விமான டிக்கெட் வழங்கும் சாளரம் திறப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்காக, நாரஹேன்பிட்டையில் உள்ள...

images
ஏனையவைஇந்தியாசெய்திகள்

இந்தியாவில் தயாரான மூன்று இருமல் மருந்துகள் : உலக சுகாதார நிறுவனம் விடுத்த எச்சரிக்கை

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இருமல் மருந்துகளில் நச்சுத்தன்மை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த மருந்துகளை...