hy
தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டு போனிலும் டைனமிக் ஐலேண்ட் வசதி! பெறுவது எப்படி?

Share

ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் கிடைக்கத் துவங்கி உள்ளது.

இந்த அம்சம் பல்வேறு விதமான அலெர்ட்கள், நோட்டிபிகேஷன் மற்றும் உரையாடல்களை வழங்குகிறது.ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் டைனமிக் ஐலேண்ட் போன்ற அம்சம் கொண்டு வர மிக எளிமையான வழிமுறை உள்ளது.

இதற்கு பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் டைனமிக்-ஸ்பாட் (dynamicspot) எனும் செயலியை இன்ஸ்டால் செய்தால் போதுமானது.

hy
ஜாவோமோ உருவாக்கி இருக்கும் இந்த செயலி ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் போன்றே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த செயலி தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகவே கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள நாட்ச் அளவுக்கு ஏற்ப ஐலேண்ட் அளவு மற்றும் எங்கு தோன்ற வேண்டும் என்ற விவரங்களை செட் செய்ய டைனமிக்-ஸ்பாட் வழி செய்கிறது.

இத்துடன் செயலியை பல விதங்களில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் எது போன்ற நோட்டிபிகேஷன்கள் திரையில் தோன்ற வேண்டும் என்பதை தீர்மானிக்க செய்கிறது.

இந்த செயலியின் இலவச பதிப்பில் அம்சங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன.

அதிக அம்சங்கள் நிறைந்த செயலியை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் விலை 4.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...