thumbnail 3
இலங்கைசெய்திகள்

உலர் வலய விவசாயத்தில் சர்வதேச ஆய்வு மாநாடு

Share
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் உலர் வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு கடந்த 14 ஆம் திகதி புதன்கிழமை கிளிநொச்சி – அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீட மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடம், வடக்கு – கிழக்கை மையப்படுத்தி உலர் வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாட்டை 2015ம் ஆண்டு முதல் வருடம் தோறும் நடாத்தி வருகிறது. அந்த வரிசையில், அதன் எட்டாவது மாநாடு கடந்த புதன்கிழமை விவசாய பீடாதிபதி கலாநிதி எஸ். வசந்தரூபா தலைமையில் இடம்பெற்றது.
“உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்காக வளர்ந்து வரும் பொருத்தமான விவசாயத் தொழில்நுட்பங்கள்” (“Emerging Appropriate Agro-technologies Towards Food Sustainability”) என்ற தொனிப் பொருளில் இடம்பெற்ற இந்த ஆய்வு மாநாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
ஜப்பான் கய்சு பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் ஒகடா கைசு ஜப்பானில் இருந்து வருகை தந்து பிரதான பேச்சாளராக் கலந்து கொண்டு, “ஜப்பானின் ஸ்மார்ட் விவசாயம் : ஒரு பார்வையும் அதன் போக்கும” (Smart Agriculture’ in Japan: An Overview of the Trend) எனும் தலைப்பில் முதன்மைப் பேருரையாற்றினார்.
இவ்வாய்வு மாநாட்டில் இலங்கை மற்றும் சர்வதேச ஆய்வாளர்களால் பயிராக்கவியல், விவசாய உயிரியல், விலங்கு விஞ்ஞானம், மண், சூழல் மற்றும் பொறியியல் விஞ்ஞானம், உணவு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், நீர், பொருளாதாரம் மற்றும் அறிவூட்டல் ஆகிய உபதொனிப் பொருள்களில் 48 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 657a8557d51bd md
செய்திகள்இலங்கை

காய்கறி விலையில் கடும் அதீத உயர்வு: பச்சை மிளகாய் 1,000 ரூபாயைத் தாண்டியது; மக்கள் கடும் அவதி!

இலங்கையின் சில பகுதிகளில் தாழ்நிலக் காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத உயர்வை எட்டியுள்ளதாகச்...

25 6943e3aa87891
செய்திகள்உலகம்

தன்னை ‘ஹீரோவாக’ காட்டிக்கொள்ள 12 நோயாளிகளைக் கொன்ற மருத்துவர்: பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு!

பிரான்சில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் திட்டமிட்டு விஷ ஊசி செலுத்தி, 12 பேரின் மரணத்திற்கு காரணமான...

1813418 flight12
செய்திகள்இந்தியா

அடர்ந்த மூடுபனி: டெல்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...

674b2a65b606d hardik pandya in frame 191544440 16x9 1
விளையாட்டுசெய்திகள்

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி: 16 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா புதிய சாதனை!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான 5-ஆவதும் கடைசியுமான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில்...