thumbnail
இலங்கைசெய்திகள்

வட்டுக்கோட்டையில் வாள்களுடன் இளைஞன் கைது!

Share

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணைவி பகுதியில் 11 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினரால் 22 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட் துணவி பகுதியிலேயே  நேற்று இரவு 8 மணியளவில் இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

வட்டுக்கோட்டை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில்  வாள்களை பயன்படுத்தி கட்டுச் சொல்லும்  கோவிலொன்றில் வாள்களை உடமையில் வைத்திருப்பதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப்படையினர் 11 வாள்களை கைப்பற்றியதோடு குறித்த வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 22வயது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞனை கைது செய்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இவை தமது பூசை வழிபாடுகளிற்கு பயன்படுத்தப்படுவதாக கைதான இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவரின் தந்தையே ஆலயத்தில் பூசைகளில் ஈடுபடுவர்

மேலதிக  விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...