பொதுவாக வறண்ட சருமம் என்பது நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
எனவே இந்த பிரச்சனை பெண்களுக்கு பெரிய தொந்தரவாக உள்ளது.
எனவே எளிமையான முறையில் சரும பிரச்சனையை சரி செய்யும் சில வழிமுறைகளை நாம் அறிந்து கொள்வோம்.
- பாதி அவகாடோ எடுத்துக்கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். பின் இந்த கலவையை முகத்தில் தடவிக்கொண்டு 20 நிமிடங்கள் உலர வைக்கவும். இது சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்து மின்ன வைக்கும்
- ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போய் சருமத்துக்கு பொலிவை ஏற்படுத்தும்.
- தக்காளி சாறு, தேன், முல்தானி மட்டி போன்றவைகளை சேர்த்து கிரீம் போல் அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். வறண்ட சருமம் இதன் மூலம் பொலிவு பெறும்.
- வாழைப்பழம், பப்பாளிப்பழம், ஆரஞ்சு பழம் போன்றவைகளை சேர்த்து அதில் அரை தேக்கரண்டி முல்தானி மட்டி பவுடர் சேர்த்து கிரீம் போல ஆக்கி முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள்.
- ஓட்ஸ், பார்லி, சோயா மில்க் போன்றவைகளை சேர்த்து பேக் போடலாம். கேரட் சாறில் முல்தானி மட்டி பவுடர் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.
- பாலாடை, ஆப்பிள் இரண்டையும் சேர்த்து சருமத்தில் பூசுவதும் வறண்ட சருமத்துக்கு பொலிவை ஏற்படுத்தும்.
#SkinCare #Beauty Tips
Leave a comment