raw banana puttu
மருத்துவம்

வாழைக்காயின் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதா? அவசியம் தெரிஞ்சிகோங்க

Share

வாழைக்காயில் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாாகம் ஆகியவை உள்ளன.

மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதசத்து,  நார்ச்சத்து போன்றவையும் உள்ளன.

மேலும் இதில் எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. பல நோய்களுக்கு மருந்தாக திகழ்கின்றது. தற்போது அவற்றை பார்ப்போம்.

Valakkai uses Tamil

  • வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால்ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கும்.
  • வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.
  • பசியை கட்டுபடுத்தக்கூடிய ஆற்றல் வாழைக்காய்க்கு உண்டு. மேலும் வாழைக்காயுடன் மிளகுசீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது.
  • நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக்காய்கறி வழங்கப்படுகிறது. வாழைக்காயின் மேற்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது. 
  • வாழைக்காய் சாப்பிட்டால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்கள் சரியாகும்.
  •  வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால், உடல் எடை குறையும். வாழைக்காய் குடலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கொழுப்பு செல்களை அழிக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்கிறது.
  • வாழைக்காய் ரத்த செல்களில் உள்ள குளுகோஸ் உறிஞ்சுவதை தடுக்கிறது. இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.
  • வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கியுள்ள கழிவுகளையும், நச்சு பொருட்களையும் வெளியேற்றுகிறது. மேலும் பெருங்குடலில் ஏற்படும் புற்று நோய் வராமல் தடுக்கிறது.
  • வாழைக்காயில் விட்டமின்,கால்சியம்,மெக்னீசியம் ஆகியவை உள்ளது. இவை எலும்புகளுக்கு போதிய வலிமை தந்து, மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் ஆகிய நோய்கள் நம்மை ஆண்ட விடாமல் தடுக்கிறது.
  • வாழைக்காயில் காணப்படும் விட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு வழங்குகிறது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35 1
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்குமருத்துவம்

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா? மூலிகையின் அரசி என்று அறியப்படும் துளசி செடியில் பல்வேறு...

tamilni 261 scaled
மருத்துவம்

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா?

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா? நாம் உணவு சமைக்கும் போது பலசுவைக்காக உணவுப் பொருட்களை...

tamilni 613 scaled
பொழுதுபோக்குமருத்துவம்

பனங்கிழங்கால் இத்தனை நன்மைகளா..!

பனங்கிழங்கால் இத்தனை நன்மைகளா..! நமது தாயகப் பிரதேசத்தில் தற்போது பனங்கிழங்கு சீசன் ஆரம்பமாகி மும்முமாக விற்பனை...

download 3 1 14
மருத்துவம்

நீரிழிவு நோயாளிகள் கால் வீக்கத்தை தவிர்க்க பின்பற்றவேண்டியவை!

உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்காமல் இருப்பதும், சுரக்கும் இன்சுலினை உபயோகிக்காமல் இருப்பதும் தான் என்பது நீரிழிவு...