அலைபாயும் கூந்தலும், அடர்த்தியான கேசமும் ஒரு பெண்ணுக்கு இருந்தால் அதை விட அழகு வேறென்ன இருக்க முடியும்? முடி கொட்டும் பிரச்சனையை சரி செய்து, மீண்டும் முளைக்காத இடத்திலும் முடி முளைக்க வைப்பதற்கு முருங்கைக்கீரை வீட்டில் இருந்தாலே போதும். ஒரு கைப்பிடி அளவிற்கு முருங்கைக் கீரையை எடுத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் ஐந்து சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுதாக அப்படியே சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்து எடுத்த இந்த விழுதை கசக்கி பிழிந்தால் அதிலிருந்து கிடைக்கக்கூடிய சாறை எடுத்து நன்கு வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை தினமும் நீங்கள் தலைக்கு குளிக்க போகும் முன்பு தலையில் இருக்கும் வேர் கால்களில் மட்டும் நன்கு தடவி உலர விட்டு விட வேண்டும். ஒரு 20 நிமிடம் உலர விட்டுவிட்டு பின்னர் தலைக்கு நன்கு ஷாம்பு போட்டு குளித்து விடுங்கள். இது போல தொடர்ந்து செய்து வர முடிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து கிடைக்கும்.
நீங்கள் இதுவரை காணாத அபரிமிதமான வளர்ச்சியை இந்த ஒரு குறிப்பை பயன்படுத்துவதன் மூலம் எளிதாக கண்டு விடலாம். பிறகு முடி ஸ்ட்ரைட்னிங் செய்தது போல அலைபாயும் அழகை பெற ஒரு கப் அளவிற்கு சாதத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சாதம் அரைபடுவதற்கு நீங்கள் அரிசி களைந்த தண்ணீரை முதலிலேயே தேவையான அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரிசி களைந்த தண்ணீர் என்றால் அரிசியை நீங்கள் கழுவும் போது கிடைக்கக்கூடிய தண்ணீர் ஆகும். அரிசியை ஒருமுறை நன்கு கழுவி அந்த தண்ணீரை கீழே ஊற்றி விடுங்கள். பிறகு இரண்டாவது முறை கழுவும் பொழுது கிடைக்கக்கூடிய அந்த தண்ணீரை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம்! இதனுடன் சாதத்தை சேர்த்து நைசாக கூழ் போல மிக்ஸியில் அடித்து கொள்ள வேண்டும். பிறகு இந்த பேக்கை தலை முழுவதும் போட வேண்டும்.
வேர் கால் முதல் நுனி வரை எல்லா இடங்களிலும் இந்த சாத கஞ்சியை தடவி அப்படியே ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்து கொள்ளுங்கள். அதன் பிறகு தலைமுடியை நீங்கள் அலசிப் பாருங்கள், உங்க முடியும் சலசலன்னு அலைபாயத் துவங்கும். காற்றில் மிதக்கும் பஞ்சு போல மிருதுவாக மாறும். காசு செலவு செய்து நீங்கள் பார்லருக்கு செல்லாமலேயே, உங்கள் முடியை இந்த சாதாரண பொருட்களை வைத்து நீங்கள் நினைத்த மாதிரி மாற்றி தான் பாருங்கள்.
#LifeStyle
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment