1742369 fire
உலகம்செய்திகள்

கியூபா எண்ணை கிடங்கில் மின்னல் தாக்கம்! – 120 பேர் படுகாயம்

Share

கியூபா நாட்டின் மடான்சாஸ் நகரில் உள்ள எண்ணை சேமிப்பு கிடங்கு மீது மின்னல் தாக்கியதில், எண்ணெய் கிடங்கில் மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஒரு கலன் மீது மின்னல் தாக்கி தீப்பிடித்த நிலையில், அருகில் இருந்த மற்றொரு கலன் மீதும் தீ பரவியதால் குறித்த பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எண்ணை கிடங்கில் இருந்து சுமார் 100 கி.மீ. தூரத்துக்கு கரும்புகை பரவியுள்ளது.

இந்த விபத்தில் 121 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணியில் ஈடுபட்ட 17 தீயணைப்பு வீரர்களை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வந்தாலும் தீ கட்டுக்குள் வரவில்லை.

எண்ணை கிடங்குக்கு அருகே உள்ள பகுதிகளில் இருந்து சுமார் 1,900 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்க நட்பு நாடுகளின் சர்வதேச நிபுணர்களின் உதவிகள் மற்றும் ஆலோசனைகளை நாடியுள்ளதாக கியூபா நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...