ஜோதிடம்
ஆடி மாதத்தில் என்னென்ன செய்யலாம்? – கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
பொதுவாக ஆடி மாதத்தில் ஒரு சில காரியங்களை செய்ய கூடாது என்று நமது பெரியோர்கள் கூறுவதுண்டு.
அந்தவகையில் ஆடி மாதத்தில் என்னென்ன செய்யலாம்?செய்யக்கூடாது? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
- ஆடி மாதத்தில் தாலிப்பிரித்து கோர்க்கலாம்.
- ஆடிப்பெருக்கு அன்று கிரகப்பிரவேசம் செய்வதை காட்டிலும், ஆவணி மாதத்தில் செய்வது சிறப்பான பலனைத் தரும்.
- ஆடி வெள்ளிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறப்பதை காட்டிலும், பெண் குழந்தை பிறப்பது சிறப்பாகும்.
- ஆடி மாதம் வளைகாப்பு செய்வதை காட்டிலும், ஆவணி மாதத்தில் செய்வது சிறப்பாகும்.
- ஆடி மாதம் மற்றும் வருட தொடக்கத்தில் மொட்டை அடிப்பதை தவிர்த்து மற்ற நாட்களில் அடிப்பது உத்தமம்.
- குலதெய்வம் வெளியூராக இருக்கும் பட்சத்தில் இவ்விதம் செய்யலாம் தவறில்லை. ஆனால், உள்ளூராக இருக்கும் பட்சத்தில் ஒரே நாளில் செய்வது உசிதமாகும்.
- ஆடி மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்வதை காட்டிலும், ஆவணி மாதத்தில் செய்வது சிறப்பாகும்.
- ஆடி மாதம் பெண் பார்க்க செல்வதை தவிர்த்து மற்ற மாதங்களில் செல்லலாம்.
#Hinduism
You must be logged in to post a comment Login