ஈஸி முறையில் மிளகு கோழி வறுவல்
உங்கள் விடுமுறை நாட்களை கொண்டாட சுவையான ரெஸிபியை செய்து அசத்துங்கள்.
கோழி – 750 கிராம்
மிளகுதூள்– 2 தேக்கரண்டி
தயிர் – 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்– 1
கறிவேப்பிலை– தேவையான அளவு
உப்பு– தேவைக்கேற்ப
நல்லெண்ணெய்– 10 மில்லிலீற்றர்
கோழித் துண்டுகளை தயிர், உப்பு சேர்த்து பிரட்டி 20 நிமிடங்கள் வரை ஊறவிடுங்கள்
பின்பு வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் சட்டியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி பொன்நிறமானதும் ஊறவைத்த கோழிக் கறித் துண்டுகளை போட்டு மிதமான தீயில் விட்டு வதக்குங்கள்.
பின் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் போட்டு கிளறி விடவும். தேவைப்பட்டால் கோழி வெந்து சிவக்க சிறிதளவு நீர் ஊற்றிக் கொள்ளுங்கள். வதங்கியதும் மிளகுதூள் பொடியை போட்டு சுருள வதங்க விடவும். பின்பு இறக்கி பரிமாறவும்.
Leave a comment