Connect with us

ஜோதிடம்

நினைத்தது நினைத்தபடி நிறைவேற ஒரு மண்டலம்!

Published

on

500x300 1718757 villakku 1

முற்காலத்தில் மருத்துவமாக இருந்தாலும் வழிபாடாக இருந்தாலும் விரதமாக இருந்தாலும் ஒரு மண்டல காலம் அதாவது 48 நாள்கள் கடைப்படிக்கச் சொல்லுவார்கள். அந்த கணக்கு என்னவென்று தெரியுமா?

சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவதை நாம் ஏற்றுகொள்கிறோம் அல்லவா? அது போலத்தான், நம் பூமியைச்சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுகின்றன.

நம்மை பாதித்து நம் உடலில், மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இப்படி நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் வகைப்படுத்தி வைத்துள்ளனர்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தினசரி காலண்டரில், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா? அது போல வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை அதன் பெயர்களை கொண்டே நாம் அறியலாம்.

ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி, அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், 12 ராசிக்கூட்டங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இவைகளுடைய கதிர்வீச்சு ஆதிக்கம் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும்.

எப்படி என்கிறீர்களா…? இதோ இப்படி..

கிரகங்கள் 9, ராசி கூட்டங்கள் 12, நட்சத்திர கூட்டங்கள் 27. இந்த மூன்றையும் கூட்டி பாருங்கள்> 9+12+27=48 எப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் எவ்வுயிரும் வாழ முடியாதோ, அதே போல் இந்த மூன்று கூட்டமைப்புகளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை.

எனவே தான், தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன. ஒரு பாழடைந்த ஆலயம் கூட கும்பாபிஷேகம் செய்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் செய்தால் மீண்டும் அங்கு அந்த தெய்வ சாநித்யம் உயிர் பெறும்.

48 நாட்கள் தொடர்ந்து நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்திற்கு சென்று வந்தாலே நமது வாழ்க்கையில் ஒரு பிரமிப்பூட்டும் மாற்றம் வருவதை நம் ஒவ்வொருவராலும் உணரமுடியும்.

48 நாட்கள் தினமும் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று விளக்கு ஏற்றி 15 நிமிடம் வேண்டிக் கொண்டால் குலதெய்வத்தின் ஆசி இப்பிறவி முழுவதும் நமக்குத் தொடர்ந்து கிட்டும்; இப்படி பல செயல்களை சொல்லலாம்.

இன்னும் சொல்ல போனால் சித்த மரபின் படி நாம் உண்ணும் உணவு ரத்தமாகி சதையாகி எலும்பாகி, மஜ்ஜையாகி பின்னர்… அது விந்துவாக மாறுவதற்கு ஒரு மண்டல காலம் எடுக்கும்.

இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்படி செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும். அதே போல் தொடர்ந்து 48 நாட்கள் ஒரு மண்டல காலத்துக்குச் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றிகரமாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ஏதாவது ஒரு செயலயோ அல்லது வேண்டுதலையோ 48 நாட்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செய்து தான் பாருங்களேன்….! இந்த யோக அறிவியல் ரகசியத்தின் உண்மை விளங்கும்.

#LifeStyle

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 1 Rasi Palan new cmp 1
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp Rasi Palan new cmp
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டு...

Rasi Palan new cmp 17 Rasi Palan new cmp 17
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்1 வாரம் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்1 வாரம் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...