தமிழ் சினிமாவில் பல காதல் வெற்றிப்படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் வாசுதேவ் மேனனின் 19 வயது மகனான ஆர்யா யோஹன் மேனன், தமிழகத்தில் நடைபெற்ற கிரிகெட் போட்டி ஒன்றில் கலந்து பலரது கவனத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் டி.என்.பி.எல். (TNPL) நடைபெற்று வருகிறது.
2022 டி.என்.பி.எல். தொடர் கடந்த 23-ம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் நெல்லை அணியின் வெற்றிக்கு இயக்குநர் கௌதம் மேனனின் மகன் ஆர்யா யோஹன் மேனன் முக்கிய காரணமாக இருந்தார்.
இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஆர்யா யோஹன் பவர்ப்ளேவில் மிகவும் அட்டகாசமாக பந்துவீசினார். பவர் ப்ளேவில் மட்டும் 2 ஓவர்கள் வீசி 15 ரன்களே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார்.
ஆர்யா யோஹன் லைன் மற்றும் லென்த்தில் மிகவும் அற்புதமாக பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடி அளித்தார்.
ஆர்யா யோஹன் மேனன் மொத்தம் 3 ஓவர்கள் வீசி 26 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். மேலும், ஒரு ரன் அவுட்டும் செய்தார். இந்த போட்டியில் நெல்லை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் கௌதம் மேனனின் மகன் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கியுள்ளது சினிமா ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
#CinemaNews
Leave a comment