ட்விட்டர் நிறுவனம் தற்போது புது அப்டேட்டாக, ட்விட்டர் வாயிலாக தனது பயனர்களுக்கு நேரடியாக ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கும் வசதியை விரைவில் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஷாப்பிஃபை உடன் ட்விட்டர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் ட்விட்டர் மூலம் இந்த ஷாப்பிங் வசதியை பயனர்கள் பெறுவதற்காக, தனியாக ஒரு ஆப்ஷனை அதில் கொண்டுவர உள்ளது.
இதன் மூலம் அனைத்து முன்னணி பிராண்ட்களின் பொருட்களையும், இனி ட்விட்டர் வாயிலாக வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#Technology
Leave a comment