Accident
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இராகலை விபத்தில் இளைஞர் மரணம்!

Share

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புரூக்சைட் சந்தி – ஹைபொரஸ்ட் பிரதான வீதியின் சில்வர்கண்டி தோட்ட பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த விபத்தில் ஒருவருக்குக் காலில் முறிவு ஏற்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹைபொரஸ்ட் மாகுடுகலை தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இராகலையிலிருந்து புரூக்சைட் சந்தி ஊடாக மாகுடுகலை தோட்டத்தை நோக்கிப் பயணித்துள்ளனர்.

இந்தநிலையில் இவர்கள் சில்வர்கண்டி தோட்டத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் ஹைபொரஸ்ட் பகுதியிலிருந்து இராகலையை நோக்கிப் பயணித்த பார ஊர்தி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதுண்டுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பார ஊர்தியில் மோதுண்ட நிலையில் வீசி எறியப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு காயமடைந்த இளைஞர்களை சில்வர்கண்டி தோட்ட மக்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற இளைஞர் காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் மாகுடுகலையை சேர்ந்த 26 வயதுடைய ஞானபீட சமன்குமார என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் பார ஊர்தி சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் பார ஊர்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 17
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் புதிய போர்முனை: இஸ்ரேல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ (Operation Roaring Lion)...

Untitled 16
செய்திகள்விளையாட்டு

தமிழக சட்டமன்ற தேர்தல் – 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் த.வெ.க!

இந்தியாவின் தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம்...

Untitled 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான CEWET புலமைப்பரிசில்: விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு, இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தினால்...

Untitled 14
செய்திகள்இந்தியா

த.வெ.க-வை கண்டு தி.மு.க அஞ்சுகிறது: பரப்புரைக்குத் தடை விதித்த அரசுக்கு விஜய் கடும் கண்டனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய், சென்னையில் தனது தேர்தல் பரப்புரைக்குத் திட்டமிடப்பட்டிருந்த இடத்தில்...