பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்றிரவு 8 மணிக்கு முன்னர் கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், அவரைக் கைதுசெய்வதற்கு கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையைச் செயற்படுத்த வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில், நீதிமன்றத்தில் ஆஜராகும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் எவ்வித கட்டளைகளையும் பிறப்பிக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கோட்டை நீதிவானுக்கு அறிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment