தற்போது பெரும்பாலான பெண்கள், ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பருக்கள்.
இவை வந்தால் முகத்தின் அழகே பாழாகும். அதிலும் இந்த பருக்களானது முகத்தினை மிகவும் பொலிவிழந்தவாறு செய்யும். அதுமட்டுமின்றி, கடுமையான வலியையும் உண்டாக்கும்.
ஹார்மோன் மாற்றல், சுற்றுச்சூழல் மாசுபாடு, எடுத்துக்கொள்ளும் உணவுகளை என பல காரணங்கள் காரணமாக ஏற்படக்கூடும்.
இதனை சமாளிக்க செயற்கை முறையில் தயார் செய்யப்பட்டு கடையில் விற்கப்படும் கிரீம்களைத் தான் வாங்கி பூச வேண்டும் என்பதில்லை. ஒரு சில எளிய முறைகளை பின்பற்றி வந்தாலே நாளடைவில் இது சரியாகிவிடும்.
அந்தவகையில் முகப்பருக்களை எளிய முறையில் போக்க கூடிய சில வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.
அடிக்கடி முகத்தை கழுவிக் கொண்டே இருங்கள். அதற்கு மென்மையாக சோப்பை பயன்படுத்துவது அவசியம்.
மஞ்சளில் கிருமிகளை எதிர்க்கும் தன்மை அதிகம் உள்ளது.எனவே பெண்கள் தொடர்ந்து மஞ்சள் தேய்த்து குளித்து வந்தால் பருக்கள் வராது.
இரவு தூங்கச் செல்லும் முன்,முகத்தில் எலும்பிச்சை சாற்றை தடவி காய வைத்துவிட்டு,காலை கழுவி வர பருக்கள் உடனடியாக மறையும்.இதனை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே செய்ய வேண்டும்.வறட்சியான சருமம் கொண்டவர்கள்,எலுமிச்சை சாற்றுடன் சற்று தேனை கலந்து கொள்ளலாம்.
மிகவும் அழுக்கான தலையணைகள்,துண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தாதீர்கள்.அவை உங்கள் முகத்தின் மீது படும்போது,அவற்றில் உள்ள அழுக்குகள் முகப்பருவை ஏற்படுத்தக் கூடும்.
அடுத்தவர்கள் உபயோகிக்கும் பொருட்களை நீங்கள் உபயோகிக்காதீர்கள்.குறிப்பாக துண்டு,சோப்,சீப்பு ஆகியவற்றை உங்களுக்கென தனியாக வைத்துக் கொள்ளுங்கள்,இவற்றினாலும் பருக்கள் வளரும்.
தலைக்கு தேவையான அளவு மட்டுமே தேங்காய் எண்ணெய்யை வைக்க வேண்டும்.முகத்தில் எண்ணெய் வழியும் அளவிற்கு எண்ணெய் தேய்க்காதீர்கள்.
கண்ட அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினால் அவற்றில் உள்ள ரசாயனம் பருக்களை வரவழைக்கும். இவற்றை தவிர்த்து விடுங்கள்.
#BeautyTips
Leave a comment