சமையல் குறிப்புகள்
சுவைமிகுந்த தக்காளி ஊறுகாய்
இட்லி, தோசை , சப்பாத்தி , சாதம் போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ள சுவையான சூப்பரான தக்காளி ஊறுகாய் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
தேவையானவை
தக்காளி – 1/4 கிலோ
காய்ந்த மிளகாய் – 2
மிளகாய்த் தூள் – 2 கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 கரண்டி
தூள் – 3 கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 குழிக்கரண்டி
பெருங்காயம் – 1/2 கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை:
தக்காளியை வெட்டி மிக்ஸியில் போட்டு அதன் தோல் தென்படாதவாறு அரைக்க வேண்டும். கூடவே புளியையும் இட்டு அரைத்துக்கொள்ளலாம்.
பின்பு சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறுவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளுங்கள்.
பிறகு அரைத்த தக்காளியுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் போன்று நன்றாக வதக்க வேண்டும்.
நன்றாக கெட்டி பதத்துக்கு எண்ணெய் மிதந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கிவிடுங்கள்.
ஆறவிட்டு பின்பு காற்று புகாத கண்ணாடி போத்தலில் எடுத்து வையுங்கள்.
இப்போது சூப்பரான தக்காளி ஊறுகாய் தயார்.
இந்த தக்காளி ஊறுகாய் பத்து – இருபது நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
வேலைக்கு செல்லும் இல்லத்தரசிகள் ஓய்வு நாளில் இதை செய்துவைத்துக்கொண்டால் ஒரு மாத கால அளவுக்கு பிரச்சினையை தவிர்க்கலாம்.
You must be logged in to post a comment Login