தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்பு 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மின்சார சபை உத்தியோகத்தர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்பு!

Share

சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்ட வந்த மின்சார சபை உத்தியோகத்தர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரியநீலாவணைப் பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது:-

கடந்த வியாழக்கிழமை (26) வழமை போன்று மட்டக்களப்பு மாவட்டம், கல்லடி இலங்கை மின்சார சபை காரியாலயத்தில் கடமையாற்றும் 57 வயதான நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கடமை நிமிர்த்தம் களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றுக்குச் சென்று மின்மானியை பரீட்சித்துள்ளார்.

பின்னர் அந்த வீட்டில் தாயுடன் நின்ற 9 வயது மதிக்கத்தக்க சிறுவனை அருகில் உள்ள வீட்டின் மின் மானியைப் பார்வையிடத் துணைக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன் அங்கு சிறுவனுடன் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

அதன்பின்னர் சிறுவன் தனக்கு நடந்த அனைத்து விடயங்களையும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் குறித்த மின்சார சபை ஊழியர் அன்றைய தினம் தனக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதை அறிந்து மறுநாளான வெள்ளிக்கிழமை (27) அதிகாலை அம்பாறை மாவட்டம், பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து மனைவி உள்ளிட்ட உறவினர் தூக்கில் தொங்கியவரை மீட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர். எனினும், தூக்கில் தொங்கியவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் குறிப்பிட்டன.

உயிரிழந்தவர், உடல் கூற்று விசாரணையின்படி கழுத்துப் பகுதி சுருக்கினால் இறுகியதால் மூச்சுத் திணறி இறந்துள்ளார் தெரிவிக்கப்பட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டது.

உயிரிழந்த நபர் இரு பிள்ளைகளளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...