ஜோதிடம்
வாஸ்து குறைபாடா? தீர்க்க இலகு வழிகள்
வாஸ்து குறைபாடா? தீர்க்க இலகு வழிகள்
அனைவருக்கும் சொந்தமாக வீடு வாங்குவது மிகப் பெரிய கனவு. ஆனால் வாங்கிய வீட்டில் தங்கும்போது சில வாஸ்து குறைபாடுகளால் பிரச்சினைகள் தோன்றி அதனை தீர்ப்பதே பெரும் போராட்டமாக அமைந்துவிடும்.
வாஸ்துவால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க கலங்க வேண்டிய அவசியமில்லை. இவற்றை சரிசெய்ய சுலபமான பரிகாரங்கள் உள்ளன.
அவற்றை செய்தாலே வாஸ்து தோஷம் நீங்கி பிரச்சினைகள் படிப்படியாக குறைய ஆரம்பித்து விடும்.
இந்தப் பரிகாரங்களை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
உங்கள் வீட்டின் கதவில் வெற்றிலையை மாலையாக கோர்த்து அணிவித்தால் மகாலட்சுமி வீட்டில் குடியேறுவாள். இதனை வெள்ளி செவ்வாய் தினங்களில் செய்வது நல்ல. மறு நாள்களில் அவற்றை நீக்கி தண்ணீர் பாத்திரத்தில் போடவும். சிறிது நேரம் ஊறியவுடன் அந்த நீரை வீடு முழுவதும் தெளித்து ஒரு வெள்ளைத் துணியில் கட்டி ஆறு அல்லது குளத்தில் வீசி விடுங்கள். இதனால் வாஸ்துவால் ஏற்படும் அதனைத்து பிரச்சினைகளும் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்..
வெள்ளிக்கிழமைகள் தோறும் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வாருங்கள். இது குடும்பத்துக்கு நலம் விளைவிக்கும்.
வீட்டின் முன் பகுதியில் மயில் இறகை சொருகி வைத்தால் எதிர்மறை ஆற்றலை தடுத்து நேர்மறை ஆற்றலை வழங்கும். இதற்கு காவடியில் மயிலிறகு வைப்பது வழக்கம்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலையில் வீடு முழுவதும் சாம்பிராணி புகை போடுதல் நன்று. இதனால் தோஷங்கள் நீங்கப்பெறும்.
வீட்டின் ஈசானிய மூலையில் ஒரு செம்பில் நீர் ஊற்றி, அதன் மேல் ஒரு தேங்காயை வைத்து கலசம் ஏற்றி வைக்க வாஸ்து குறைபாடுகளை கலச அமைப்பு நீக்கி விடும். இவ்வாறு செய்தால் வாஸ்து தோஷத்தால் தடைப்பட்ட தொழில், திருமணம் என்பவை நடைபெறும்.
வீட்டில் வாஸ்து குறை நீக்கும் ஸ்லோகம்
ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரத்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்யாங்காய நம:
ஓம் மஹா காயாய நம:
வீட்டில் வாஸ்து தோஷம் உண்டானால் தினமும் இந்த மந்திரத்தை 12 முறை உச்சரிக்க வாழ்வில் நலமுண்டாகும்.
You must be logged in to post a comment Login